வணக்கம் அனைவருக்கும்
உலகத்தீரே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அன்பு நெறியோடு பிரதிபலன் எதிர்பாராமல் நாட்டுக்கு நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற அன்போடும் ஆர்வத்தோடும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்துத் தொண்டாற்றி வரும் அனைவருக்கும் எம் குருநானக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வலைப்பூவில் சென்னை, வேளச்சேரியில் உள்ள எமது கல்லூரியான குருநானக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் முந்தைய சாதனைகளும், தற்போதைய நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் பதிவாக இடப்படும்.
இது எங்கள் சாதனைகளை பறைசாற்றிக் கொள்ளும் தளமல்ல, எங்களின் சேவைகளைக் கண்ணுறும் சமுகத்தார்க்கு, தாமும் இதுபோல் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தும் தூண்டுகோலாக அமையும் தளம் ஆகும்.
இனி வரும் பதிவுகளில் எம் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சாதனைகளை பதிவிடுகின்றேன்.
என்றும் அன்புடன்
மு.தியாகராஜ்
நா.ந.திட்ட அலுவலர்
குருநானக் கல்லூரி
1980-81 திருபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில சேவை செய்த குருநானக் கல்லூரி மாணவன் என்ற முறையி ல் அருமையான பணிகள் தொடர்வதை கண்டு பெறுமை படுகிறேன். Raman.P
ReplyDelete